ஊழல் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய முன்னாள் சேட்ஸ் ஊழியருக்குச் சிறை

1 mins read
4fc6a831-28e6-41d6-b9bd-05f464758e52
லியோங் போ கியோங்கிற்கு ஓராண்டு, மூன்று மாதங்கள், மூன்று வாரச் சிறை விதிக்கப்பட்டது - ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ் கோப்புப் படம்

‘சாட்ஸ்’ நிறுவனத்தின் விநியோகப் பிரதிநிதிகள் பலருடன் $18,000க்கும் அதிகமான ஊழல் ஏற்பாடுகளில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிக்கு வியாழக்கிழமை (ஜூன் 26) ஓராண்டு, மூன்று மாதங்கள், மூன்று வாரச் சிறை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரரான 39 வயது லியோங் போ கியோங், $14,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த இரு குற்றச்சாட்டுகளையும், மோசடி மற்றும் நீதி அதன் கடமையைச் செய்ய இடையூறு செய்தல் தொடர்பான தலா ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

ஏனைய எட்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

‘சாட்ஸ்’ நிறுவனத்தின் பராமரிப்பு மையத்தின் பயிற்சி, தரம், திட்ட நிர்வாகியாக இருந்த லியோங் போ கியோங், சாங்கி விமான நிலையத்தில், தரை செயல்பாடுகளைக் கையாளுபவராகவும் விமானத்திற்கு உணவு வழங்குபவராகவும் இருந்தார்.

அவர் ரகசியமான ஒப்பந்தக் குத்தகை தொடர்பான தகவல்களை பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ளார். அந்த மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் முன்னதாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்