என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங், தம்முடன் தகாத உறவில் இருந்த சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங்குடன் இருக்கும் காணொளிக் காட்சிகள் வெளிவந்துள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி டர்ஃப் கிளப் சாலையில் இருந்த ‘ரிஸ்டோரான்டே டா வாலென்டீனொ’ (Ristorante Da Valentino) உணவகத்தில் அந்த இருவரும் இடம்பெறும் படங்கள் எடுக்கப்பட்டன. அந்த உணவகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
இத்தாலியச் சமையல் கலைஞரும் உணவக உரிமையாளருமான வாலென்டீனொ வால்ட்டுலினாவின் சகோதரி பெர்லா வால்ட்டுலினாவின் இன்ஸ்டகிராம் கணக்கில் அந்தப் புகைப்படங்களும் காணொளிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
ஒரு காணொளியில், ஜென்சன் ஹுவாங் ஒரு கையில் மதுக் குவளையைப் பிடித்தவாறு, பெரிய பாலாடைக்கட்டிச் சக்கரத்தில் ‘ரிசோட்டோ’ உணவைக் கிளறுவதைக் காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து, புகைப்படக் கருவி மெதுவாக ஆலிஸ் ஹுவாங்கை நோக்கித் திரும்புகிறது. வெள்ளை நிற மேற்சட்டையும் சிவப்பு-இளஞ்சிவப்பு நிறப் பாவாடையும் அணிந்திருக்கும் அவர், புன்னகைத்தவாறு தமது ஐஃபோன் மூலம் ஜென்சன் ஹுவாங்கைப் படம் எடுக்கிறார்.
அதன் பின்னர், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தைப்பேயில் நடைபெற்ற தொழில்துறை விருந்து ஒன்றில் ஜென்சன் ஹுவாங்கும் ஆலிஸ் ஹுவாங்கும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 2025ஆம் ஆண்டு மே மாதம், தைவானில் ஜென்சன் ஹுவாங் அளித்த இரவு விருந்திலும் அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தது காணப்பட்டது.
‘மெகாஸ்பீட்’ (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங், என்விடியா இணை நிறுவனருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டதாக 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ‘த நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் உறவு குறித்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.
