தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 9% அதிகரிப்பு

2 mins read
6c07fd7e-bf51-4782-97a5-95108d85968a
டிசம்பர் மாதத்தில் முக்கிய ஏற்றுமதியின் அதிகரிப்புக்கு மின்னணுவியல் சாரா ஏற்றுமதி முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 விழுக்காடு அதிகரித்தது.

புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த நிபுணர்கள் முன்னுரைத்ததைவிட இது அதிகம்.

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 7.8 விழுக்காடு உயரும் என்று அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 9 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இந்தப் புள்ளிவிவரங்களை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஜனவரி 17ஆம் தேதியன்று வெளியிட்டது.

மாத அடிப்படையிலும் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி அதிகரித்தது.

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் அது 1.7 விழுக்காடு அதிகரித்தது.

நவம்பர் மாதத்தில், முக்கிய ஏற்றுமதிக்கான வளர்ச்சியை சிங்கப்பூர் அதன் 2024 ஆண்டுக்கான முன்னுரைப்பை ஏறத்தாழ 1 விழுக்காட்டுக்குக் குறைத்தது.

ஆகஸ்ட் மாதத்தின் முன்னுரைப்பு 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக இருந்தது.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் முக்கிய ஏற்றுமதியின் அதிகரிப்புக்கு மின்னணுவியல் சாரா ஏற்றுமதி முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

மின்னணுவியல் சார்ந்த ஏற்றுமதியும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டு அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் மின்னணுவியல் சார்ந்த ஏற்றுமதி 18.6 விழுக்காடு அதிகரித்தது.

அதற்கு முந்தைய மாதம் அது 23.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.

பகுதிமின்கடத்திக்கான ஏற்றுமதி 23.4 விழுக்காடு கூடியது.

கணினிகளுக்கான ஏற்றுமதி 83.6 விழுக்காடு அதிகரித்தது.

மின்னணுவியல் சாரா ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6.6 விழுக்காடு உயர்ந்தது.

இருப்புச் சொத்துகளாக வைக்கப்படாத தங்கத்தின் ஏற்றுமதி 67.6 விழுக்காடு அதிகரித்தது.

உணவு தயாரிப்பு ஏற்றுமதி 61.5 விழுக்காடும் சிறப்பு இயந்திரங்கள் ஏற்றுமதி 19.9 விழுக்காடும் உயர்ந்தன.

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா, தைவான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்தன.

ஆனால் ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் குறைந்தன.

குறிப்புச் சொற்கள்