நூற்றாண்டு கால வரலாறு கொண்ட ஆலயத்திற்கு வருகையளித்த தலைவர்கள்

நூற்றாண்டு கால வரலாறு கொண்ட ஆலயத்திற்கு வருகையளித்த தலைவர்கள்

1 mins read
0892ab6b-db7c-4cd7-b01a-81e443a4cbd2
கோவிலுக்கு வருகையளித்த முதல் பிரதமர் லீ குவான் இயூ. - படம்: செட்டியார் கோவில் குழுமம்

சிங்கப்பூரின் பல்வேறு சமய நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றிவரும் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் விழாக்களுக்கு அரசு, சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வருகையளித்துச் சிறப்பித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு வருகையளித்த அமைச்சர் ஓங் யீ காங்.
2019ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு வருகையளித்த அமைச்சர் ஓங் யீ காங். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

குறிப்பாக, 1988ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவும் 2001ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய அதிபர் எஸ்.ஆர். நாதனும் அக்கோவிலுக்கு வருகையளித்தனர்.

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு வருகையளித்த பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர்கள், பேராளர்கள்.
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு வருகையளித்த பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர்கள், பேராளர்கள். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

அவர்களைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு புதிய விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தபின் அக்கோவிலின் இணைக் கட்டடத்தை அப்போது அமைச்சராக இருந்த அதிபர் தர்மன் சண்முகரத்னம் திறந்து வைத்தார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப்புத்தாண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் சான் சுன் சிங், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சில் அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

இணைக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் திரு தர்மன் சண்முகரத்னம்.
இணைக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் திரு தர்மன் சண்முகரத்னம். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

கடந்த ஆண்டு கியோங் செய்க் சாலையில் நடைபெற்ற சீனப் பாரம்பரிய விழாவான ‘சிஸி’ (Qixi) திருவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங், அக்கோவிலுக்கு வருகையளித்தார்.

அவருடன் அமைச்சர்கள் சான் சுன் சிங், இந்திராணி ராஜா, துணை அமைச்சர் ஆல்வின் டான், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா உள்ளிட்டோர் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்