நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ), உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) ஆகியவற்றில் 2027ஆம் ஆண்டு முக்கியத் தலைமைத்துவ மாற்றம் நடக்கவுள்ளது.
அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாகியாக சான் சான் பொறுப்பேற்பார் எனப் போக்குவரத்து அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தற்போது அப்பதவி வகிக்கும் 61 வயது இங் லாங் அன்றைய தினமே பொறுப்பில் இருந்து விலகுவார். 53 வயது திரு சான், தற்போது உள்துறை அமைச்சின் மேம்பாட்டுத் துணைச் செயலாளராகவும் எச்டிஎக்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றி வருகிறார்.
திரு சானுக்குப் பதிலாகக் காவல்துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை ஆணையர் ஆல்வின் மோ செர் லூங், எச்டிஎக்ஸ் அமைப்பின் புதிய தலைமை நிர்வாகியாகவும் உள்துறை அமைச்சின் மேம்பாட்டுத் துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுவார் என உள்துறை அமைச்சு தமது அறிக்கையில் கூறியது.
46 வயது திரு மோ, 2027 பிப்ரவரி 1ஆம் தேதி அப்பொறுப்புகளை அதிகாரபூர்வமாக ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
