தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்பவாங்கில் தீப்பிடித்து எரிந்த லாரி; மருத்துவமனையில் இருவர் அனுமதி

1 mins read
3f588ec4-9d28-43cd-baff-f5c2bdbc6e84
அட்மிரல்ட்டி ரோடு வெஸ்ட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகக் காலை 11 மணி அளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. - காணொளிப் படம்: டிக்டாக்

செம்பவாங்கில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நிகழ்ந்தது.

இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அட்மிரல்ட்டி ரோடு வெஸ்ட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகக் காலை 11 மணி அளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.

லாரியின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீ அணைக்கப்பட்டதாகவும் புகையைச் சுவாசித்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லாரியின் பின்பகுதியிலிருந்து கரும்புகை வெளியானதைக் காட்டும் காணொளி ஆகஸ்ட் 31ஆம் தேதி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வாகனத்துக்கு அருகில் இருந்த புல்வெளியில் சாம்பல் காணப்பட்டது.

சிறிது தூரத்தில் எரிவாயுத் தோம்பு இருந்ததைக் காணொளியில் காண முடிந்தது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்