முதலாளியின் நாயை அடித்ததாகக் கூறப்படும் மியன்மார் நாட்டவரான 26 வயது ஜுன்னி லால் அவுன் புய் மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. துன்புறுத்தப்பட்ட நாய் பின்னர் உயிரிழந்தது.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) கைது செய்யப்பட்ட அப்பணிப்பெண், விலங்குகள் பறவைகள் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
ஜனவரி 22ஆம் தேதி காலை 9.50 மணிக்கும் 11.45 மணிக்கும் இடையில் ‘போய்போய்’ என்ற 13 வயது ஆண் பழுப்பு நிற பூடல் வகை நாயை அவர் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அவர் நாயை அதன் கழுத்தைப் பிடித்து, தரையில் தள்ளி, அதன் தலையில் கையாலும் காகிதத்தால் உருவாக்கப்பட்ட குச்சியாலும் பலமாக அடித்ததாகக் கூறப்படுகிறது.
நாய்க்குக் கட்டுப்போட முயன்றபோது தன் காலை அதன் மேல் வைத்து அழுத்தியதாகவும், வெயில் படுவதற்காக அதனைப் பாதுகாப்பு வார்களில் கட்டி தாழ்வாரத்தில் தொங்கவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன்னி லால் பூய் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடர எண்ணுவதாக ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலாளி சொன்னதால்தான் அந்த நாயைத் தாழ்வாரத்தில் தொங்கவிட்டதாகக் கூறிய ஜூன்னி, அக்குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட விரும்புவதாகக் கூறினார். மற்ற மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொள்ளவுள்ளார்.
முதல் முறை செய்யும் குற்றமாக இருந்தால், ஒவ்வொரு விலங்கு துன்புறுத்தலுக்கும் $15,000 வரை அபராதம் 18 மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அப்பணிப்பெண்ணின் முதலாளி, முந்தைய நேர்காணல் ஒன்றில், 2015ஆம் ஆண்டில் ரோச்சோர் ரோட்டில் அலைந்துகொண்டிருந்த அந்த நாய் அது பேருந்தில் மோத இருந்ததாகவும் தான் அதைக் காப்பாற்றியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்,
கடந்த 2023 டிசம்பர் நடுப்பகுதியில், தனது வீட்டில் உதவுவதற்கும் நாயைக் கவனித்துக்கொள்ளவும் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.
அவர் வீட்டில் இல்லாதபோது துன்புறுத்தல் நடந்துள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைப் பார்த்தபோது அதுபற்றி அவர் தெரிந்துகொண்டார்.
தனது நாயின் மரணம் பற்றி அறிந்ததும் அதன் உரிமையாளர் போலிசில் புகார் செய்தார். அவ்விவகாரம், தேசிய பூங்காக் கழகத்தின் கீழுலுள்ள விலங்கு மருத்துவ சேவையிடம் தெரிவிக்கப்பட்டது.