தமிழ் அறிஞரும் பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 65ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேச்சரங்கம் வடிவில் நடைபெற்றது.
‘விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும்’ எனும் தலைப்பில் மாணவி அக்ஷிதா சுரேஷ், ‘மக்கள் கவிஞர் வரிகளில் திருக்குறள் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் ஆசிரியர் இரா ஸ்டாலின் போஸ் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 40 பேர் பங்கேற்றனர்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கவிஞரின் படத்துக்கு மாலை அணிவித்ததுடன் அவரது பாடல்கள் உணர்த்திய கருத்துகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இயன்முறை மருத்துவர் ரா. ஜனார்த்தனன் மருத்துவக் குறிப்புகள் அளித்து, சில செயல்முறை விளக்கங்களையும் வழங்கினார்.