தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் விபத்தில் ஆடவர் மரணம்

1 mins read
கவனமின்றி வாகனம் ஓட்டியதற்காக லாரி ஓட்டுநர் கைது
42931315-ba0d-42fc-a735-df0574dc406f
துவாஸ் சவுத் அவென்யூ 12க்கும் துவாஸ் நெக்சஸ் டிரைவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த விபத்தில், ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்பட்டது. - படம்: கூகல் மேப்ஸ்

துவாசில் டிசம்பர் 15ஆம் தேதி காலை நடந்த விபத்தைத் தொடர்ந்து லாரியில் பயணம் செய்த 40 வயது ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே லாரியில் பயணம் செய்த மேலும் இருவர் காயமடைந்தனர். முறையே 26, 29 வயதுடைய அந்த ஆடவர்கள் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

துவாஸ் சவுத் அவென்யூ 12க்கும் துவாஸ் நெக்சஸ் டிரைவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து டிசம்பர் 15ஆம் தேதி காலை 9.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

கவனமின்றி வாகனம் ஓட்டியதற்காக 41 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்