வாகனம், எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து விபத்து: மருத்துவமனையில் கார் ஓட்டுநர்

வாகனம், எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து விபத்து: மருத்துவமனையில் கார் ஓட்டுநர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

04 May 2024 - 4:38 pm

1 mins read

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துடன் கார் ஒன்று தெலுக் பிளாங்கா பகுதியில் மே 4ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிய 32 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தெலுக் பிளாங்கா ரோடு, ஹார்பர்ஃபிரன்ட் அவென்யூ சாலைச் சந்திப்பில் விபத்து நேர்ந்திருப்பது குறித்து காலை 9.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு ஆடவர் சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் விசாரணையில் உதவி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

விபத்து காரணமாக குறைந்தது 10 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதியுள்ளதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் அனுப்பிய படங்களில் காண முடிகிறது.

விளக்குக் கம்பம் ஒன்று விபத்து காரணமாகச் சாலையில் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தெலுக் பிளாங்காஹார்பர்ஃபிரண்ட்பயணிகள்விசாரணைசாலை விபத்து