சிங்கப்பூருக்குள் 800 மின்சிகரெட்டுகள் கொண்டு வந்தவருக்கு 14 வாரச் சிறை

சிங்கப்பூருக்குள் 800 மின்சிகரெட்டுகள் கொண்டு வந்தவருக்கு 14 வாரச் சிறை

2 mins read
e8af19f8-6257-4193-a05b-9d36f77f348e
சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் விநியோகித்த மலேசிய ஆடவருக்கு 14 வாரச் சிறை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விரைவாகப் பணம் சம்பாதிக்க, மின்சிகரெட்டுகள் சட்டவிரோதமானவை என்று தெரிந்தும் சிங்கப்பூருக்கு மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய விநியோக ஓட்டுநராகப் பணியாற்ற ஒப்புக்கொண்டார் 20 வயதான லிம் டெக் வீ.

மின்சிகரெட் இறக்குமதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மலேசியரான லிம் டெக் வீக்கு வியாழக்கிழமை (ஜனவரி 22) 14 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

லிம், பகுதி நேர மின்சார ஊழியராக வேலை செய்ய எப்போதாவது சிங்கப்பூர் வருவார். 2025 அக்டோபரில் ஒரு விளம்பரத்தை பார்த்த பின்னர் தடைசெய்யப்பட்ட பொருள்களை வழங்க லிம் முடிவு செய்தார்.

ஒவ்வொரு வேலைக்கும் 1,000 ரிங்கிட் (s$318) முதல் 2,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அந்த விளம்பரம் வாக்குறுதி அளித்தது. மின்சிகரெட், அது தொடர்பான பொருள்களைச் சிங்கப்பூருக்கு விநியோகிக்கும் வேலை என்று கூறப்பட்டது.

பணம் தேவைப்பட்டதால், சிங்கப்பூருக்கு மின்சிகரெட்டுகளைக் கொண்டுவருவது சட்டவிரோதமானவை என்று தெரிந்தும் லீ அந்த வேலையை ஏற்றுக்கொண்டார்.

2025 அக்டோபர் இரண்டாவது வாரத்தில் லிம் இருமுறை சிங்கப்பூருக்குள் மின்சிகரெட்டுகளைக் கொண்டு வந்து கொட்டு மொத்தம் 3,040 ரிங்கிட் சம்பாதித்தார்.

அதற்கு அடுத்த மாதம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் பிடிபட்டார்.

மின்சிகரெட் தொடர்பான பொருள்களுடன், 870 பயன்படுத்தி வீசக்கூடிய மின்சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் இறக்குமதி செய்தால் $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்