22 ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தைத் தவணை முறையில் கொடுக்க சோயா பால் நிறுவனமான ஜாலிபீன் இசைந்துள்ளது.
ஊழியச் சட்டத்தின்கீழ் அந்நிறுவனத்தை மனிதவள அமைச்சு தற்போது விசாரித்து வருகிறது.
மேலும் மூன்று பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கும்படி வேலை கோரிக்கை மன்றங்கள் ஜாலிபீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளன.
கூடுதலாக நான்கு வழக்குகள் தற்போது சமரச பேச்சுவார்த்தைகளுக்கு உள்ளாகியுள்ளன அல்லது கோரிக்கை மன்றங்களின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் வழங்கப்படாதச் சம்பளம் தொடர்பில் உதவி நாடிய ஊழியர்களின் எண்ணிக்கை 29க்கு அதிகரித்துள்ளதாக சர்ச்சை தீர்வுக்கான முத்தரப்புப் பங்காளித்துவ கூட்டணியும் மனிதவள அமைச்சும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள தங்கள் பதிலில் குறிப்பிட்டன.
டிசம்பர் 2024 முதல் வழக்கப்படாத அல்லது தாமதமாக வழங்கப்படும் சம்பளம் பற்றிய புகார்கள் தொடர்பில் இந்த அமைப்புகள் பதிலளித்துள்ளன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து உதவி நல்கும்.
“ஊழியர்களின் சம்பளத்தையும் மத்திய சேமநிதிப் பங்களிப்புகளையும் நேரத்துடன் வழங்கும்படி முதலாளிகளுக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று சர்ச்சை தீர்வு தொடர்பான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பும் ப மனிதவள அமைச்சும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
சம்பளத்தை நேரத்திற்குப் பெறாத ஊழியர்கள், முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பிடம் புகார் அளிக்கலாம் என்றும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.