‘மற்றும் குழுவினரின்’ மூன்றாவது மாதாந்தரக் கூடுகை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது.
இம்முறை எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பனின் ‘ஆகுதி’ சிறுகதைகள், கவிதைகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும்.
கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் அமைப்பின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றது.
அதில் ‘த இன்விசிபில் கான்ட்ராக்ட்’ எனும் குறும்படம் திரையிடப்பட்டது. உலகெங்கும் தொடரும் ஆட்கடத்தல் பற்றியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமும் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களும் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
எழுத்தாளர் பா. திருச்செந்தாழையின் ‘விலாஸம்’ சிறுகதை குறித்த கருத்துகளை வாசகர்கள் பகிர்ந்துகொண்டனர் .
திரையிசைப் பாடல்களில் எடுத்தாளப்பட்ட இலக்கியத் தொடர்புகள் பற்றி எழுத்தாளர் இளம்பரிதி கல்யாணகுமார் உரையாற்றினார்.
இறுதியாகக் கவிஞர் ஹரிவம்சராய் (தமிழில்: வசந்ததீபன்) எழுதிய ‘அன்பு’, கவிஞர் தேவதச்சனின் ‘நீ பார்த்தாயா’, கவிஞர் ஸ்ரீ வள்ளியின் ‘பிறகு’ ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டபின் கலந்துரையாடல் நடைபெற்றது.
மேல்விவரங்களுக்கு: மதிக்குமார் தாயுமானவன் - 93264096, யாழிசை மணிவண்ணன் - 83575294.

