உலகளாவிய பருவநிலை நடவடிக்கைக்குப் பங்களிக்கவும் வளரும் நாடுகளுக்கு நிதி ஆதரவு வழங்கவும் சிங்கப்பூர் ஊக்குவிக்கிறது.
துருக்கியின் அண்டால்யா நகரில் நடக்கும் கோப்31 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் இதற்கு உந்துதல் அளிக்கின்றன. நவம்பர் 9ஆம் தேதி தொடங்கிய அந்த மாநாட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்காசியாவில் கரிமச் செயல்திட்டங்களை உருவாக்க இரு அமைப்புகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
நவம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அத்திட்டங்கள், கரிம வரவுகளுக்காகக் காடுகளையும் சதுப்புநிலக் காடுகளையும் பாதுகாக்கும்.
‘க்ளைமேட் ஆக்ஷன் ரிசர்வ்’ என்ற இலாப நோக்கமில்லா அனைத்துலக அமைப்பு, சிங்கப்பூரில் புதிய அலுவலகத்தை அமைக்கிறது. கரிம வரவுத் திட்டங்கள் நம்பகமானவை என்பதை அது உறுதிசெய்யும்.
கரிம வரவுகளுக்கான தேவையை உறுதிப்படுத்த மேலும் இரு திட்டங்கள் தொடங்கப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதியன்று புதிய தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் நிறுவனங்கள் எளிதாகக் கரிம வரவுகளை வாங்கலாம்.
‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ ஆதரவுபெறும் மற்றொரு திட்டம், கரிம வரவுகளுக்கான தேவையை ஒருங்கிணைக்க முனைகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் டன் கரிம வரவுகளை வாங்க ‘ஆக்ஷன் ஃபார் எ ரெசிலியன்ட் க்ளைமேட்’ கூட்டணி இலக்கு கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒரு மில்லியன் டன் வரவுகளுக்கான திட்ட முன்மொழிவுகளை இக்கூட்டணி கோரும்.
கரிம வரவு என்பது ஒரு டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவதைத் தடுப்பதைக் குறிக்கும். நாடுகள், நிறுவனங்கள் இவற்றை வாங்கித் தங்கள் கரிமத் தடத்தை ஈடுசெய்யலாம். இது சிங்கப்பூரின் பசுமைப் பொருளியல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
