சிங்கப்பூரில் பருவமழை அதிகரிப்பால் ஜனவரி 10ஆம் தேதிக்கும் ஜனவரி 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கழகம் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், இந்தக் காலகட்டத்தில் கனமழையால் தீவில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடலாம் என முன்னுரைத்துள்ளது.
இதனால், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கழகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பதால், சில இடங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 22 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என அது தெரிவித்துள்ளது.
குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பொழிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் அது கூறியுள்ளது.