தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் பாலர்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

2 mins read
151f3955-49fb-474a-a9e4-e82568870dc1
187, மார்சிலிங் ரோட்டில் உள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர்பள்ளியில் வகுப்பு நடத்தும் ஆங்கில மொழி ஆசிரியர் முகம்மது ஷாமி சுபியான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் பாலர்பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

ஆரம்பகால பாலர்பருவத் துறை விரிவாக்கம் காணப்படும் நிலையில், அந்த அதிகரிப்பு வந்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, 245 பாலர்பள்ளி ஆண் ஆசிரியர்கள் இருந்தனர். 2019ஆம் ஆண்டில் இருந்த 130ஐ காட்டிலும் அது அதிகம் என்று பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியது. ஆண்கள், பெண்கள் எனத் திறனாளர்களை அத்துறைக்கு ஈர்க்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாகவும் அது சொன்னது.

‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர்பள்ளி நடத்துநரின் பொது நிர்வாகி தியான் ஐ லிங், ஆரம்பகால பாலர்பருவத் துறைக்கு ஆண் ஆசிரியர்கள் முக்கியம் என்று கூறினார்.

“ஆரம்பகால பிள்ளைப்பருவக் கல்வியில் வாழ்க்கைத் தொழிலை அமைக்க ஆண்களுக்கு ஊக்கமளிப்பதால், இளம் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது என்பது ஆண், பெண் என எவருக்கும் விலைமதிப்புள்ள, மன நிறைவு அளிக்கக்கூடிய வாழ்க்கைத் தொழில் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது,” என்றார் அவர்.

“வெவ்வேறு கண்ணோட்டங்கள், பெண் ஆசிரியர்களுக்கு இணையான கற்பித்தல் முறைகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருவது மட்டுமன்றி, ஆண் ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான முன்மாதிரிகளாகத் திகழலாம். குறிப்பாக, தங்கள் வாழ்க்கையில் அத்தகைய ஆண் நபர்கள் இல்லாத குழந்தைகளுக்கு,” என்றார் திருவாட்டி தியான்.

“இது குறிப்பாக பிள்ளைகளின் பாதுகாப்பு, நம்பிக்கை, நலனைப் பேணிவளர்ப்பதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்,” என்றும் அவர் கூறினார்.

இருந்தாலும், திரு முகம்மது ஷாமி சுபியான், திரு மேத்யூ ஜேசன் ஜொங் போன்றவர்களைக் காண்பது அரிது என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத் துறையில், ஆண் அசிரியர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு என்பதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்