தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பாவில் விரிவாக்கம் காண கூடுதல் சிங்கப்பூர் நிறுவனங்கள் விருப்பம்

2 mins read
49e9cb9f-0775-4a1c-812e-a4fb718d2e14
ஜெர்மனியின் பாவேரியா மாநிலம், பாத் டோல்ஸில் உள்ள சிங்கப்பூர் வான்வெளிச் சாதன உற்பத்தி ஆலையில் மின்னணுப் பாகங்களை சேகரிக்கும் ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்கிழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் அப்பாற்பட்டு ஐரோப்பியச் சந்தைகளில் கால்பதிக்க கூடுதலான சிங்கப்பூர் நிறுவனங்கள் விருப்பம் காட்டுகின்றன.

ஜெர்மனி, ஹாலந்து, பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பியச் சந்தைகளில் விரிவாக்கம் செய்ய 2023ல் 220 நிறுவனங்களுக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு (EnterpriseSG) ஆதரவளித்தது. 2022ல் இருந்ததை விட இது 20 விழுக்காடும் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையை விட இது கிட்டத்தட்ட 50 விழுக்காடும் அதிகம்.

“பெருந்தொற்றுக்குப் பிறகு, ஐரோப்பாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த கூடுதல் நிறுவனங்கள் விருப்பம் காட்டி வருவதை நாங்கள் கண்டுள்ளோம்,” என்றார் ஐரோப்பாவுக்கான எண்டர்பிரைஸ் எஸ்ஜி இயக்குநர் ஆலன் இயோ.

உலகின் ஆகப்பெரிய பொருளியல்கள் பலவற்றைக் கொண்டுள்ள ஐரோப்பா, தொழில்நுட்பத்திலும் புத்தாக்கத்திலும் வாய்ப்புகளை வழங்குவதை அவர் சுட்டினார்.

ஐரோப்பாவின் தொழில்நுட்ப வல்லமையை சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம். தொழில்நுட்பங்களைப் பெற ஐரோப்பிய நிறுவனங்களுடன் சேர்ந்து அவை பங்காளித்துவ முயற்சியில் ஈடுபடலாம் என்றார் திரு இயோ.

பெரிய வாடிக்கையாளர் தளம் கொண்டுள்ள ஐரோப்பா, சிங்கப்பூரின் வாழ்க்கைமுறை பொருள், சேவைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் சொன்னார்.

ஐரோப்பியச் சந்தையின் நுழைவாயிலாக ஜெர்மனி

ஐரோப்பியச் சந்தைக்குள் நுழைய எந்த நாட்டில் தொடங்குவது எனத் தேர்வுசெய்ய வேண்டுமெனில், ஜெர்மனி ஒரு சிறந்த தெரிவு. உலகின் ஆகப்பெரிய பொருளியல்களில் ஒன்றான ஜெர்மனி, ஐரோப்பாவுக்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது.

ஜெர்மனியில் வலுவாக உள்ள உற்பத்தித் துறை, பொருளியலில் ஏறத்தாழ 20 விழுக்காடு பங்கு வகிப்பதைச் சுட்டிய திரு இயோ, ஐரோப்பாவில் முன்னணி புத்தாக்க நடுவமாகவும் ஜெர்மனி விளங்குவதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்