தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆதரவு: கல்வி அமைச்சர்

2 mins read
36377a96-7f96-4e3a-8c4c-83eeaf9a24a1
தேசியக் கல்விக் கழகத்தின் பேராசிரியர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிரியர்களுக்கு மேம்பட்ட முறையில் ஆதரவளிக்கும் இலக்குடன் அவர்களின் பணிச்சுமையை சமாளிக்க உதவுவது, நிபுணத்துவத்தில் வளர்ச்சி அடைவதற்கு கைகொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளை அமைச்சும் பள்ளித் தலைவர்களும் கண்டறிவர் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

மேலும், வலுவான கல்வி சமூகத்தைக் கொண்டிருக்கும் வகையில் சிறந்த கல்வியாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முயற்சிகள் இரட்டிப்பாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதன்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற தேசியக் கல்விக் கழகத்தின் பேராசிரியர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கல்வி அமைச்சர், பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டிற்கான அமைப்பு (ஓஇசிடி) நடத்திய உலகளாவிய ஆய்வின் முடிவுகள், இங்குள்ள ஆசிரியர்கள் மதிப்புமிக்கவர்களாக உணர்கிறார்கள் என்பதையும் வேலையில் அதிகளவிலான நிறைவை அடைகிறார்கள் என்பதையும் காட்டுவதாகக் கூறினார்.

கல்வி சாராத பணிகள் மற்றும் இணையவழி கற்பித்தல் அடிப்படையில், மற்ற அமைப்புகளில் உள்ள தங்கள் சகாக்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் ஆசிரியர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளது என்றும் திரு லீ சுட்டினார்.

‘ஓஇசிடி’ அமைப்பு அக்டோபர் 7ஆம் தேதி வெளியிட்ட அதன் அனைத்துலக ஆய்வு முடிவுகளில், சிங்கப்பூர் ஆசிரியர்கள் வாரத்திற்கு சராசரியாக 47.3 மணிநேரம் வேலை செய்வதாகக் குறிப்பிட்டது. இது சராசரி அளவான 41 மணிநேரத்தைவிட அதிகமாகும். நிர்வாகக் கடமைகள், தேர்வுத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட சில பணிச்சுமை தொடர்பான காரணங்கள், இங்குள்ள ஆசிரியர்களால் மன அழுத்தத்திற்கான முக்கியமானவையாக அடையாளம் காணப்பட்டன.

அவ்வகையில், “அந்தப் பிரச்சினைகளை நாங்கள் கவனத்தில்கொள்கிறோம். அதன்தொடர்பில் அவர்களின் பணிச்சுமையை சமாளிக்க உதவுவது உள்ளிட்ட வழிகளில் ஆசிரியர்களுக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்றும்  திரு லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்