தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50 வயதிலும் அதற்குப் பிறகும் பெண்கள் பலர் குழந்தை பெறுகிறார்கள்

2 mins read
60f91dec-7f2c-4131-8e03-e9c230c4073f
50 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகையும் கெத்தாய் பாடகருமான லியு லிங்லிங்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த சில ஆண்டுகளாக 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய பெண்கள் பலர் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.

கடந்த 2023ல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 19 மாதர், குழந்தை பெற்றனர். அவர்களில் மூவருக்கு அப்போது குறைந்தது 55 வயது என்று குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையத்தின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

சென்ற 1989க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆறு பெண்களுக்குக் குழந்தை பிறந்தது. இந்த எண்ணிக்கை 2010க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரித்தது. 33 பெண்கள் 41 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அவர்களில் 58 வயதுடைய ஒருவர், 2016ல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார். அவர், சிங்கப்பூரின் ஆக வயதான காலத்தில் குழந்தை பெற்ற பெண்மணி என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூரில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் குழந்தை பெற்ற மிகவும் பிரபலமான நடிகையும் கெத்தாய் பாடகருமானவர் லியு லிங்லிங்.

செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த இவர், 2013ஆம் ஆண்டு தமது 50வது வயதில் மகன் கேலப்பைப் பெற்றெடுத்தார்.

கருவுற்றிருக்கும் காலத்தில் உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச்சத்து, உயர் ரத்த சர்க்கரை ஆகியவை இருந்ததாகவும் இவை அனைத்தும் பிள்ளைப் பேற்றை ஆபத்தானதாக ஆக்கியதாகவும் 2022ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் லியு கூறினார்.

லியு அனுபவித்தது கருவுற்ற வயதான பெண்ணுக்கு ஏற்படும் வழக்கமான அபாயங்கள் என்று மகப்பேறு மருத்துவர் கிறிஸ்டோபர் சோங் கூறினார்.

பெண் வயதாக ஆக, அவரின் முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து, கருத்தரிப்பதை அதிக கடினமாக்குகிறது. பெண் 50 வயதைத் தொட்டால், இயற்கையாகக் கருத்தரிக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட 1 விழுக்காடுதான். அதாவது அந்த வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் உள்ள 100 பெண்களில் ஒருவர் மட்டுமே கருவுறுதல் சிகிச்சைகள் இல்லாமல் குழந்தை பெறுவார்,” என்று அவர் கூறினார்.

“வயதான தாய்மார்களுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், கருப்பைக்குள் வளர்ச்சி கட்டுப்பாடு (கருவில் உள்ள குழந்தை எதிர்பார்க்கும் விகிதத்தில் வளராதது) போன்றவை அதிகரிக்கும் அபாயங்கள் இருக்கும்.

“குழந்தைப் பேற்றின்போது, அறுவை சிகிச்சை பிரசவத்தின் அபாயங்கள் உள்ளிட்ட சிக்கல்களும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்