தேசிய தினப் பேரணி உரையை பிரதமர் லாரன்ஸ் வோங், இன்று மாலை 6.45 மணிக்கு ஆற்றத் தொடங்கவுள்ளார்.
மலாய், மாண்டரின் உரைகளுக்குப் பிறகு அவரது ஆங்கில உரை இரவு 8 மணிக்கு இடம்பெறும்.
முக்கிய தேசிய கொள்கைகள் இந்தப் பேரணியின்போது அறிவிக்கப்படும். விவரங்களை உடனுக்குடன் உங்களுக்கு வழங்கும் இந்த இணைப்பை நாடவும்.
பதற்றநிலை அதிகரித்துள்ள, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த உலகில் சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைய திரு வோங், ஆகஸ்ட் 8ஆம் தேதியில் ஆற்றிய தம் தேசிய தினச் செய்தியின்போது கேட்டுக்கொண்டார்.
ஒற்றுமை, உறுதி, செயல்பாடு ஆகியவற்றில் சிங்கப்பூர் தொடர்ந்து தனித்தன்மையுடன் திகழவேண்டும் என்று அவர் கூறினார்.
குறைந்த வருமானக் குடும்பங்களைத் தூக்கி நிறுத்துவதற்கும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றியடையச் செய்வதற்குமான கூடுதலான பாதைகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் வோங் கூறினார்.
இதற்கான கூட்டு முயற்சியாக வர்த்தகங்கள், சமூகக் குழுக்கள், தொழிற்சங்கங்கள், தனிநபர்கள் ஆகியோருடன் இணைந்து அரசாங்கம் தீர்வுகளை வடிவமைக்க உள்ளது.