அனைத்துலக அளவில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வேண்டும்: ஜோசஃபின் தியோ

1 mins read
0293b321-00fd-44de-8efb-55912ab09f0c
சீனாவின் சூசோ நகரில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் ஜோசஃபின் தியோ . - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக அளவில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வேண்டும், எல்லை தாண்டி ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க அது கைகொடுக்கும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 11ஆம் தேதி சீனாவின் சூசோ நகரில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசியபோது அக்கருத்தை அமைச்சர் ஜோசஃபின் தியோ முன்வைத்தார்.

அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜோசஃபின் தியோ, தொழில்நுட்பத்தால் எல்லை தாண்டி ஏற்படும் பொருளியல், சமூக தாக்கங்களை பற்றியும் பேசினார்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு கொண்டுவரலாம். உலக நாடுகள் பல அனைத்துலக அளவில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்துள்ளன என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்