தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்தியப் பகுதியில் புதிய ‘எஸ்யுஎஸ்எஸ்’ கிளை

2 mins read
8bb7b34f-a126-4d49-a3ce-766dbb1c2125
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்). - கோப்புப் படம்: இணையம்

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) அதன் புதிய வளாகத்தை அமைக்க ஆதரவு பெறவுள்ளதென இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

புதிய எஸ்யுஎஸ்எஸ் கிளை எங்கு அமையும் என்பதை திரு வோங் குறிப்பிடவில்லை. எனினும், பலர் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தபடி வாழ்நாள் கற்றலை வழிநடத்தவும் எல்லா வயதுப் பிரிவினர் மீது மிகுந்த கவனம் செலுத்தும் வகையிலான பாடத் திட்டங்களை வழங்கவும் புதிய வளாகம் எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கு உதவும் என்று அவர் கூறினார்.

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து எஸ்யுஎஸ்எஸ் கிளமென்டியில் உள்ள சிங்கப்பூர் நிர்வாகக் கழக (SIM) வளாகத்தின் பகுதியில் வாடகைக்குச் செயல்பட்டு வருகிறது.

எஸ்யுஎஸ்எஸ், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் போன்ற ஓரளவு புதிய தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் நிதி திரட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் அறக்கட்டளை (Singapore Universities Trust) 10 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்று திரு வோங் அறிவித்தார். இந்த அறக்கட்டளை 2042ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் அறக்கட்டளை, முன்னாள் மாணவர்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும் உயர் கல்விக்கு சமூக அளவில் ஆதரவளிக்கவும் பல்கலைக்கழகங்கள் திரட்டும் நன்கொடைக்கேற்ப மானியங்கள் வழங்கி ஆதரவளிக்கக் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 ஆண்டு காலத்துக்கு இத்திட்டத்துக்கென கிட்டத்தட்ட நான்கு பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.

அமைப்புகளின் உதவியின்றி பல்கலைக்கழகங்கள் தாங்களே திரட்டும் அதே தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. அதேபோல், அமைப்புகளின் உதவியுடன் பெறப்படும் நிரந்தர உதவித் தொகையின் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கம் 1.50 வெள்ளி வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்