நார்த் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, குறும்புச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு பதின்மவயதினரை காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சந்தேக நபர்களின் வயது 13க்கும் 17க்கும் இடைப்பட்டது.
புதன்கிழமை இரவு அவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளியில் இருந்த சில மேசைகளும் நாற்காலிகளும் கவிழ்க்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பாக அப்பள்ளி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை இரவு பள்ளிக்குள் அத்துமீறி சிலர் நுழைந்ததாகவும் பள்ளி பொருள்கள் சிலவற்றுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பது எப்போதும் உறுதிபடுத்தப்படும் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு வியாழக்கிழமை காலை 8:40 மணிவாக்கில் புகார் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைத் தொடர்கிறது.

