இனி ஒரே எண்ணிலிருந்துதான் காவல்துறை அழைக்கும்

இனி ஒரே எண்ணிலிருந்துதான் காவல்துறை அழைக்கும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Nov 2026 - 12:32 pm

1 mins read

பொதுமக்களைத் தொடர்புகொள்ள காவல்துறை இனி 6000-0999 என்ற ஒரே எண்ணை மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை நவம்பர் 2ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.

அரசாங்க அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமைகிறது.

காவல்துறை அழைப்புகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களுக்கு இருக்கும் சிரமத்தை இது தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட எண்ணிலிருந்து வெளிச்செல்லும் அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால், அவ்வெண்ணிற்குப் பொதுமக்கள் மீண்டும் அழைக்க முடியாது.

காவல்துறை அதிகாரியின் அழைப்பைத் தொடர்ந்து ‘gov.sg’ அடையாளத்திலிருந்து அழைத்த அதிகாரியின் பெயர் அடங்கிய அதிகாரத்துவக் குறுஞ்செய்தி உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.

பொதுமக்கள் அழைப்பை எடுக்காவிட்டாலும்கூட அந்தக் குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

அவ்வழைப்புகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதிகாரத்துவக் கருத்துரைப்புத் தளம் (feedback portal) அல்லது உதவித் தொலைபேசி எண் (1800-358-0000) வழியாகப் பொதுமக்கள் காவல்துறையை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாகக் காவல்துறை ஒருபோதும் மக்களைத் தொடர்புகொள்ளாது. போலியான அழைப்புகள் வந்தால் 1799 என்ற உதவித் தொலைபேசி வழி புகார் செய்யலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தனிப்பட்ட விவரங்களை எவரிடமும் பகிராமல் விழிப்புடன் செயல்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்