ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட என்விடியா சில்லுகளைக் கொண்டிருக்கக்கூடிய கணினி சர்வர் இயந்திரங்களை ஏற்றுமதி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர்கள் மூவர் மீதான வழக்குகள் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அன்று விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் நடைபெறும்.
கலந்துரையாடலின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் தற்காப்புத் தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபடுவர். மூவரின் வழக்குகளையும் எப்படிக் கையாள்வது என்பது கலந்துரையாடலில் ஆலோசிக்கப்படும்.
சந்தேக நபர்களில் ஒருவரான சீனாவைச் சேர்ந்த 51 வயது லி மிங்கைப் பற்றி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நீதிமன்றத்தில் பேசப்பட்டது. பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளவேண்டிருப்பதால் வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் மாவட்ட நீதிபதி பிரெண்டா டானிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள கணினி சர்வர்களில் அநேகமாக அமெரிக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பொருள்கள் இருந்திருக்கும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருந்தார். அமெரிக்க அரசாங்கம், அதிநவீன செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் விற்பனையைக் கட்டுப்படுத்த 2022ஆம் ஆண்டில் சீனா மீது சில ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது. சம்பந்தப்பட்ட சில்லுகளில் என்விடியா நிறுவனம் தயாரிப்பவையும் அடங்கும்.
லி மற்றும் சிங்கப்பூரர்கள் ஏரன் வூன் குவோ ஜியே, 41, ஏலன் சாவ்லுன், 49, ஆகியோர் மீது முதலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றியதாக நீதிமன்றத்தில் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சீனாவின் புதிதாகத் தொடங்கப்பட்ட டீப்சீக் நிறுவனம், அமெரிக்கக் கட்டுப்பாடுகளைக் குறுக்கு வழியில் எதிர்கொண்டு அதிநவீன என்விடியா சில்லுகளை வாங்கியதா என்பதன் தொடர்பில் அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதில் சிங்கப்பூர் மீது கவனம் திரும்பியது.
சந்தேக நபர்கள் சிங்கப்பூர் உட்பட மூன்றாம் தரப்பு நாடுகளிடமிருந்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சில்லுகளை வாங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வூன், வெய் இருவரின் வழக்குகளைப் பற்றியும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பேசப்படவில்லை. எனினும், அவர்களின் வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு முந்தைய கந்துரையாடலும் அக்டோபர் 17ல் நடைபெறும்.
ஏமாற்றியதாகவும் தவறான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழும் லி மீது மொத்தம் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வூன், வெய் இருவரும் ஆளுக்கு, ஏமாற்றியதாக இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

