ஐந்து வாகனச் சாலை விபத்து: ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்

ஐந்து வாகனச் சாலை விபத்து: ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்

1 mins read
116efc33-2012-4cca-8482-b9f45a9a1e6d
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், வேன் ஒன்று சாய்ந்து விழுந்திருந்ததைக் காணமுடிந்தது. - படங்கள்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் இரண்டு வேன்கள், இரண்டு கார்கள், ஒரு டாக்சி ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து ஜூன் 19ஆம் தேதி நடந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, 25 வயது ஆண் வேன் ஓட்டுநர் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அதே நாளன்று மாலை 5.40 மணிவாக்கில் விபத்து குறித்து காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.

விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களில், வேன் ஒன்று சாய்ந்து விழுந்திருந்ததைக் காணமுடிந்தது.

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 6,779ஆக இருந்தது. அது 2023ல் 6,944க்கு அதிகரித்தது.

இருப்பினும், 2019ஆம் ஆண்டில் கொவிட் கிருமிப்பரவல் காலகட்டத்துக்கு முன்னர் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் அது குறைவாக இருந்ததாக போக்குவரத்துக் காவல்துறையின் வருடாந்திரப் புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது. 2019ஆம் ஆண்டில் பதிவான விபத்துகளின் எண்ணிக்கை 7,705ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைமருத்துவமனை

தொடர்புடைய செய்திகள்