தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் ரோடு சண்டை: மேலும் ஒருவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
cf4dfe33-ae2e-4639-bddf-4d6814792bf6
கடந்த 20ஆம் தேதி உயிரிழப்பை ஏற்படுத்திய மோதல் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர். - படம்: ஷின்மின் நாளிதழ்

உயிரிழப்பை ஏற்படுத்திய ஆர்ச்சர்ட் ரோடு ஹோட்டல் சண்டையில் ஆயுதத்துடன் வன்முறையில் ஈடுபட்டதாக மேலும் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இம்மாதம் 20ஆம் தேதி கன்கார்ட் ஹோட்டல் மற்றும் கடைத்தொகுதியில் நடந்த சண்டையில் முகம்மது இஸ்ராத் முகம்மது இஸ்மாயில் என்பவர் மாண்டுபோனார்.

அதன் தொடர்பில், சண்டையில் ஈடுபட்ட கும்பலில் 32 வயது சசிகுமார் பக்கிரிசாமியும் ஒருவராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமையன்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக, கும்பலில் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் சிஜேஷ் அசோகன், 25, மெர்வின் வெரில் டௌட், 28, பாலகிருஷ்ணா சுப்பிரமணியம், 32, ஆகிய மூவர்மீது ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட்டதாகக் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

கவிந்த் ராஜ் கண்ணன், 24, ஷர்வின் ஜே நாயர், 24, விஷ்ணு சூரியமூர்த்தி, 27, ஸ்ரீதரன் இளங்கோவன், 28, மனோஜ்குமார் வேலாயநாதம், 31, அருண் கலியபெருமாள், 32, ஆகிய அறுவர்மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதே கும்பலைச் சேர்ந்தவராகச் சந்தேகிக்கப்படும் அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாரன், 29, என்பவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்தியதாக 30 வயது முகம்மது ஷாருல்நிஸாம் ஒஸ்மான்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து சண்டை மூண்டதாகக் காவல்துறை தனது முன்னைய அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பன்னிரண்டு ஆடவர் தொடர்புடைய வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொலைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அஸ்வேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்