சிங்கப்பூரில் இருந்த நான்கு பெரெகிரின் வகை வல்லூறுக் குஞ்சுகளில் ஒன்று சனிக்கிழமை (ஏப்ரல் 4) மாண்டுகிடந்தது.
அந்தக் குஞ்சுகள், சிங்கப்பூரில் இனப் பெருக்கத்தில் ஈடுபடும் ஒரே பெரெகிரின் வல்லூறு இணைக்குப் பிறந்தவை.
கடந்த பிப்ரவரி மாதம், சுலியா ஸ்திரீட்டில் உள்ள ஒசிபிசி வங்கித் தலைமையகக் கட்டடத்தின் 34வது தளத்தின் மேல் உள்ள பகுதியில் பிறந்த குஞ்சுகளில் மாண்ட குஞ்சும் ஒன்று. அக்குஞ்சு, சம்பந்தப்பட்ட பெரெகிரின் வல்லூறு இணைக்கு இரண்டாவது முறையாகப் பிறந்தவற்றில் ஒன்று.
அது, சனிக்கிழமை பிற்பகல் மத்திய வர்த்தக வட்டாரத்தில் தரையில் மாண்டுகிடந்ததை தேசிய பூங்காக் கழகம் வருத்தத்துடன் தெரிவிப்பதாக கழகத்தின் வனவிலங்கு நிர்வாக ஆய்வுப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் மால்கம் சோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எஞ்சிய மூன்று குஞ்சுகள் பருவமடைந்துள்ளதாகவும் அவை பறக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எஞ்சிய பெரெகிரின் ஃபால்கன் குஞ்சுகள் பறப்பதற்குப் ‘பயிற்சியளித்துக்கொள்ளும்போது’ அவை தவறுதலாகத் தரையில் இறங்கக்கூடும் என்றும் டாக்டர் சோ சொன்னார்.
இறந்துபோன குஞ்சு, மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள யுஒபி பிளாசா கட்டடத்தின் கண்ணாடித் தகடுமீது மோதியதாக அச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், மதர்ஷிப் ஊடகத்திடம் தெரிவித்தார்.

