சீனா செல்லும் பிரதமர் வோங்

சீனா செல்லும் பிரதமர் வோங்

1 mins read
6e758e89-f41a-4358-84cd-3148d07d92eb
பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப் படம்: சாவ்பாவ்

பிரதமர் லாரன்ஸ் வோங், புதன்கிழமை (மார்ச் 25) தொடங்கி வரும் சனிக்கிழமை (மார்ச் 28) வரை சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

திரு வோங், ஒன்பது மாதங்களில் இரண்டாவது முறையாக சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். அவர் ஹைனான், ஹாங்காங் ஆகியவற்றுக்குச் செல்லவிருக்கிறார்.

சீனாவின் தென் துருவத்தில் அமைந்துள்ள ஹைனான் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடந்துவரும் ஆசியாவுக்கான பாவ் மாநாட்டில் (Boao Forum for Asia) அவர் முக்கிய உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்தது.

ஆசியாவுக்கான பாவ் மாநாடு, 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பொருளியல் ஒத்துழைப்புக்கான தளம் ஒன்றை ஏற்படுத்தித் தருவது மாநாட்டின் நோக்கமாகும். 2001ல்தான் சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடாகச் சேர்ந்துகொண்டது.

ஹைனானில் உள்ள பாவ் நகரில் சீனா இந்த மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த மாநாடு தொடங்கப்பட்ட தொடக்க காலத்திலேயே அதில் பங்கேற்ற உறுப்பு நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

2003ஆம் ஆண்டு அன்றைய சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் மாநாட்டில் முக்கிய உரையாற்றினார்.

ஆக அண்மையில் 2023ல் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் பாவ் மாநாட்டில் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்