பிரதமர் லாரன்ஸ் வோங், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (நவம்பர் 5, 6) அறிமுகப் பயணமாக இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்கிறார்.
நிதி அமைச்சருமான அவர், அங்கு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவையும் துணை அதிபர் ஜிப்ரான் ராக்காபூமிங் ராக்காவையும் சந்திப்பார்.
அக்டோபர் 20ஆம் தேதி பிரதமர் வோங் பங்கேற்ற பதவியேற்பு சடங்கில், இரு இந்தோனீசியத் தலைவர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
மக்கள் ஆலோசனை மன்ற நாயகர் அகமது முஸானியையும் வட்டாரப் பிரதிநிதி மன்ற நாயகர் சுல்தான் பாக்தியார் நஜமுதீனையும் பிரதமர் வோங் சந்திப்பார் எனப் பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தது.
பிரதமர் வோங்குடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் செல்கின்றனர்.
மலேசியா, புருணை, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு தமது அறிமுகப் பயணங்களின் ஓர் அங்கமாக பிரதமர் வோங்கின் ஜகார்த்தா பயணம் அமைகிறது.

