தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய வழக்கு தொடர்பில் $530 மில்லியன் ரொக்கம், சொத்துகள் பறிமுதல்

1 mins read
6e68753a-9723-405d-afd8-2cf5f91f69c4
புக்கிட் தீமாவிலுள்ள ஃபோர்த் அவென்யூவில் சூ ஷுய்மிங்கின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வீடு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரைவிட்டுத் தப்பியோடிய இரு வெளிநாட்டு ஆடவர்களிடமிருந்து $530 மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன, அல்லது அவற்றை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் 28 சொத்துகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

$3 பில்லியன் மதிப்பிலான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய விவகாரத்தில் 37, 39 வயதுகளுடைய அவ்விரு ஆடவர்களுக்கும் பங்குண்டு என்று காவல்துறையினர் மே 22 வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இருவருக்கும் எதிரான காவல்துறை விசாரணைக்கு முன்னரே அவர்கள் சிங்கப்பூரைவிட்டு சென்றுவிட்டதாகவும் தற்போது அவர்கள் சிங்கப்பூரில் இல்லை என்றும் கூறப்பட்டது.

சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை. இருப்பினும், அவர்களை சூ ஷுய்மிங், சூ ஷுய்ஜுன் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அடையாளங்கண்டுள்ளது.

சீனாவில் பிறந்த இவ்விருவரும் சிங்கப்பூரை விட்டு திடீரென 2023ஆம் ஆண்டு சென்றுவிட்டனர். இவர்களின் வர்த்தகம் குறித்தும் சொத்துரிமை குறித்தும் ‘ஓசிசிஆர்பி’ என்ற புலனாய்வு பத்திரிகை குழுவுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சேர்ந்து அம்பலப்படுத்திய அறிக்கை ஒன்று இம்மாதம் வெளியிடப்பட்டது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய விவகாரம் தொடர்பில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடந்த அமலாக்க நடவடிக்கைகளை அடுத்து 10 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டதற்குச் சில வாரங்களில் ஷுய்மிங், ஷுய்ஜுன் இருவரும் சீனாவில் தேடப்பட்டு வருவோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்