தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபரின் தீபாவளி வாழ்த்து

1 mins read
8593ac74-b6e9-4c86-93d8-6cf62a4c0d7c
அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளை ஒரு காணொளியின்வழி தெரிவித்தார். - படம்: அதிபர் தர்மன் ஃபேஸ்புக்‌ பக்கம்

அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரர்களுக்குத் தமது சமூக ஊடகப் பதிவுகள் வழியாக தீபாவளி வாழ்த்துகளை ஒரு காணொளியின்வழி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அந்தக் காணொளியில், அவர் தம் மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகியுடனும் சிங்கப்பூர் ராப் கலைஞர் யங் ராஜாவுடனும் இணைந்து, கிம் மோ சந்தைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்த இந்தியக் காலை உணவு வகைகளைச் சுவைத்தனர். ஜூ ஹெங், அயின் ஆகிய மற்ற இரண்டு பேரும் அவர்களுடன் காணொளியில் இடம்பெற்றிருந்தனர். தோசை, பரோட்டா, அப்பம் என அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் பற்றி அனைவரும் கலந்துரையாடினர். குடும்பம், குழந்தைப் பருவத்துடன் தொடர்புடைய தனிப்பட்ட நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அப்பம், தேங்காய்ப் பாலின் இனிப்பு-புளிப்புச் சுவைச் சமநிலையை தாம் விரும்புவதாக திரு தர்மன் கூறினார். அதேசமயம், திருவாட்டி இத்தோகி, தோசையின் தனித்துவமான சுவையையும் சுவாரஸ்யமான செயல்முறையையும் சுட்டிக்காட்டி, தோசையை விரும்புவதாகப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் உணவுப் பண்பாட்டின் பல வகையான பறைசாற்றும் வகையில், பாரம்பரியமாக ஒரு சமூகத்துடன் தொடர்புடைய உணவுகள்கூட எவ்வாறு மற்ற இனத்தவர்களால் ரசிக்கப்படுகின்றன என்பதை காணொளி எடுத்துக்காட்டியது.

“சிங்கப்பூரில் உள்ள நமது பண்டிகைகள் அனைத்திலும் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உணவு அல்லது ஆடை அலங்காரமாக இருந்தாலும், மிக முக்கியமானது என்னவென்றால் வெவ்வேறு இன சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்திருப்பதே ஆகும்,” என்று அதிபர் தர்மன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்