ஆய்வுக்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தப்படும் ‘பேர்’ எனும் ‘சாட்போட்’ தளத்தை பொதுத் துறையைச் சேர்ந்த அதிக அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
2024ஆம் ஆண்டிலிருந்து அதனைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.
பொதுத் துறை அதிகாரிகளில் மூன்றில் ஒரு பங்கு, ஏறக்குறைய 50,000 அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ‘பேர்’ தளத்தைப் பயன்படுத்துவதாகவும் இது, அவர்களுடைய செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதாகவும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் கணினி சமூகத்தின் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி மே 9ஆம் தேதி ஷாங்ரி-லா சிங்கப்பூரில் நடைபெற்றது.
சாட்ஜிபிடியை மற்றொரு பிரதியான ‘பேர்’ எனும் அந்த உரையாடல் தளத்தை கவ்டெக் உருவாக்கி 2023ல் அறிமுகப்படுத்தியது.
2024 அக்டோபரில் கவ்டெக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சாங் சாவ் ஷியோங், ஏறக்குறைய 50,000 அரசாங்க அதிகாரிகள் ‘பேர்’ தளத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது 100,000 பொதுத் துறை அதிகதாரிகள், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கூறியது.
மேலும் பொதுத் துறை அதிகாரிகள், ஏஐபோட்ஸ் தளத்தைப் பயன்படுத்தி பரிசோதனை அடிப்படையிலான ஆயிரக்கணக்கான உரையாடல் தளங்களை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மனிதவளம் தொடர்பான விசாரணைகள் முதல் வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் சக ஊழியர்களுக்கு வழிகாட்டுவது வரை இது பயன்படுத்தப்படுகிறது என்று திருமதி டியோ குறிப்பிட்டார்.