$391.9 மில்லியனுக்கு விற்பனையான ‘தி சென்டர்பாய்ன்ட்’ன் பின்புறக் கட்டடம்

$391.9 மில்லியனுக்கு விற்பனையான ‘தி சென்டர்பாய்ன்ட்’ன் பின்புறக் கட்டடம்

1 mins read
9794ad4b-cfce-43f6-ac4d-ffff7f079eb4
1983ல் கட்டிமுடிக்கப்பட்ட ‘தி சென்டர்பாய்ன்ட்’ கடைத்தொகுதியில் இரண்டு கட்டடங்கள் உள்ளன. - படம்: ஃபிரேசர்ஸ் புரோப்பர்டி

‘தி சென்டர்பாய்ன்ட்’ கடைத்தொகுதியின் பின்புறக் கட்டடத்திற்கான கூட்டு விற்பனை குத்தகை $391.9 மில்லியனுக்கு ‘ஃபிரேசர்ஸ் புரோப்பர்டி’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள அந்த ஏழு மாடிக் கடைத்தொகுதி மீதான தனது உரிமையை அந்தக் குத்தகை உறுதிப்படுத்துவதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கையில் ‘ஃபிரேசர்ஸ் புரோப்பர்டி’ தெரிவித்துள்ளது.

அந்தக் குத்தகை விலை ஒரு சதுர அடி நிலப்பரப்பிற்குக் கிட்டத்தட்ட 2,577 வெள்ளி என்ற விகிதத்தில் அமைவதாக விளம்பர முகவையான சேவில்ஸ் (Savills) கூறியது.

சில இடங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு அல்லது பெரிய திட்டங்களைக் கட்டுவதற்கான உரிமையைப் பெற, மேம்பாட்டாளர்கள் நில மேம்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.

ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கீட்டு முறையின்படி, இறுதி மாற்றங்களுக்கு உட்பட்டு, சில்லறை வர்த்தகக் கடை உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 0.84 மில்லியன் வெள்ளி முதல் 9.29 மில்லியன் வெள்ளிவரையிலும், வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.65 மில்லியன் வெள்ளி முதல் 7.11 மில்லியன் வெள்ளி வரையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்