சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் கவிஞரின் பெயரில் விருது வழங்கி வருகிறது.
கண்ணதாசன் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதியவர்; பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர் (ஊடகம்) எனப் பலதிறன்கள் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.
அத்தகைய துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் கருதுகிறது. விருதுக்குப் பொது மக்களும் பரிந்துரைகளை அனுப்பலாம்.
விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை, வசனம் (தொலைக்காட்சி உட்பட), பாடல், ஊடகம் (பத்திரிகை உட்பட) ஆகிய எட்டுத் துறைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்த எழுத்துத் திறன் பெற்றவராக விளங்க வேண்டும்.
விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவரின் வயது 40க்குக்கீழ் இருக்கவேண்டும்.
கண்ணதாசன் பிறந்த நாளான ஜூன் 24ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும். அதனால் 1986 ஜூன் 24 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
அவர் சிங்கப்பூர்க் குடியுரிமை உள்ளவராகவோ நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும். பரிந்துரை செய்பவரும் குடியுரிமை உள்ளவராகவோ நிரந்தரவாசியாகவோ இருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவரின் தனித் திறன்கள், அவர் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றுள்ளார் என்ற விவரங்களுடன் அவரைப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களையும் பரிந்துரை செய்பவர் தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் எத்தனை பேரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.
பரிந்துரைக்கப்படுபவர் நூல் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
பரிந்துரைக்கப்படுபவர்கள், பரிந்துரை செய்பவர் ஆகியோரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
பரிந்துரைகளை ksmani115@gmail.com அல்லது premapathi2303@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 05-11-2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கிடைக்கும் பரிந்துரைகளுடன் விருதுத் தேர்வுக் குழு தனது சொந்தப் பரிந்துரைகளையும் பரிசீலித்து, விருதுக்குரியவரைத் தெரிவு செய்யும்.
விருதுத் தேர்வுக் குழுவின் பரிந்துரையே இறுதியானது.
நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.
மேல் விவரங்களுக்கு சு.முத்துமாணிக்கம் (9675 3215) அல்லது திருவாட்டி பிரேமா மகாலிங்கம் (9169 6996) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். www.singaporetamilwriters.com இணையத் தளத்திலும் விவரங்கள் கிடைக்கும்.

