தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் தேசிய தின மொழிபெயர்ப்புப் போட்டியும் மலர் வெளியீடும் இம்மாதம் 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெறவிருக்கின்றன.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவுமலர், பாசிபிலிடி அறையில் காலை 10.30 மணிக்கு வெளியீடு காண்கிறது. இதற்குமுன் 25, 50, 100 நிகழ்வுகளின் நிறைவுமலர்கள் வெளியீடு கண்டுள்ளன.
அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
பிற்பகலில் மொழிபெயர்ப்புப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. 500 மாணவர்கள் பங்குபெறும் அந்தப் போட்டிகள் தேசிய நூலகத்தில் நடைபெறும்.
தொடக்கநிலை ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக இரண்டு சுற்றுகளாகப் போட்டி நடைபெறும்.
மாலை 5.30 மணியளவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
மலர் வெளியீடு, மாணவர்களுக்கான போட்டி ஆகிய நிகழ்ச்சிகளில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கூடுதல் தகவல்களுக்குத் திருமதி நபிலா நஸ்ரின் (90268601) அல்லது முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் (90012290) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.