குவாண்டூ உணவக முன்பதிவுத் தளம் மூடப்படுகிறது

குவாண்டூ உணவக முன்பதிவுத் தளம் மூடப்படுகிறது

1 mins read
63d6e638-b668-4831-a636-f64d59b7d8d2
சேவையை நிறுத்துவது மறுஆய்வுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வணிக ரீதியான முடிவு என்று மார்ச் 24ஆம் தேதி குவாண்டூ அறிவித்துள்ளது. - படம்: குவாண்டூ இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
Google News Preferred Icon

பிரபல உணவக முன்பதிவுத் தளமான குவாண்டூ (Quandoo), தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாகவும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முழுமையாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மறுஆய்வுக்குப் பிறகு எடுக்கப்பட்ட வணிக ரீதியான முடிவு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை குவாண்டூவில் முன்பதிவு செய்யலாம்

வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 11.59 மணிவரை இந்தத் தளம், செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

வாடிக்கையாளர் விசுவாசத் திட்டத்தின்கீழ் புள்ளிகளைப் பெறுவதற்கு ஜூன் 30 கடைசி நாளாகும். சேர்த்த புள்ளிகளைச் செப்டம்பர் 30 வரை பயன்படுத்தலாம். அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை முதல் அப்புள்ளிகள் காலாவதியாகிவிடும். அக்டோபர் 1 முதல் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டாலும், டிசம்பர் 31 வரை தளத்தை அணுகலாம்.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இந்தச் சேவை நிறுத்தப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் குவாண்டூ சேவைகள் உணவகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். எனினும், செப்டம்பர் 30க்குள் மாற்று முன்பதிவு முறைகளுக்கு மாறிவிடுமாறும் தரவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும். ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் செல்லுபடியாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உணவகம்முன்பதிவுமூடல்இணையத்தளம்செயலி