எட்டுப் போர் விமானங்களை வாங்கும் சிங்கப்பூர் ஆகாயப்படை

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை வாங்கவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு எஃப்-35பி ரக விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், அவ்வகையைச் சேர்ந்த மேலும் எட்டு விமானங்களை வாங்கவிருப்பதாகத் தற்காப்பு அமைச்சு சென்ற ஆண்டு அறிவித்திருந்தது.

வெவ்வேறு ஆற்றல் படைத்த இவ்விரு எஃப்-35 வகை விமானங்களும் ஆகாயப்படையின் செயல்திறனுக்கு வலு சேர்க்கும் என்றும் டாக்டர் இங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 29) குறிப்பிட்டார்.

“மிகுந்த தாங்குதிறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எஃப்-35ஏ விமானங்கள், செயல்திறன்மிக்க ஆயுதங்களையும் சுமந்துசெல்லும் வல்லமை படைத்தவை. எஃப்-35பி விமானங்கள் குறுகிய தொலைவில் மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் படைத்தவை,” என்று டாக்டர் ஹெங் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட எஃப்-35 விமானங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

எஃப்-35ஏ விமானங்களின் விலை குறித்த விவரங்களைத் தற்காப்பு அமைச்சு வெளியிடவில்லை. ஆயினும், அண்மைய அமெரிக்கப் புள்ளிவிவரங்களின்படி, அவை ஒவ்வொன்றும் 82.5 மில்லியன் அமெரிக்க டாலர் (S$111 மில்லியன்) விலைமதிப்புடையது எனக் காட்டுகின்றன. அதுபோல, எஃப்-35பி விமானத்தின் விலை US$109 மில்லியன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!