‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பள்ளிக் கைக்காசு நிதிக்காக 50,888 வெள்ளி நிதிதிரட்டு

1 mins read
4ab11546-af41-473b-bd24-2e351d940acc
‘பிளேஃபேக்டோ’ பள்ளியின் வருடாந்தர நிபுணத்துவ மேம்பாட்டு தினமான அக்டோபர் 24ல் இந்தத் தொகை, காசோலையாக வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணைப்பாட, மாணவர் பராமரிப்பு நிலையமான ‘பிளேஃபேக்டோ’ பள்ளி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதிக்காக 50,888 வெள்ளி திரட்டியுள்ளது.

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பண ஆதரவு தரும் நோக்கில் இந்த நிதி நிறுவப்பட்டது.

‘பிளேஃபேக்டோ’ பள்ளியின் வருடாந்தர நிபுணத்துவ மேம்பாட்டு தினமான அக்டோபர் 24ல் இந்தத் தொகை, காசோலையாக வழங்கப்பட்டது.

பள்ளியின் 10ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாட, வர்த்தகச் சமூக உணர்வு இயக்கத்தின் வழி நிதிதிரட்டு நடத்தப்பட்டது. 

இதற்காக குடும்பங்கள், மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கிவிங்.எஸ்ஜி தளம் வழி நன்கொடையாற்றினர்.

ஒவ்வொரு குழந்தைக்கும் பராமரிப்பு, மாண்பு, வளர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று ‘பிளேஃபேக்டோ’ பள்ளி அறிக்கையில் கூறியது.

குறிப்புச் சொற்கள்