அக்கம்பக்க கடைத்தொகுதிகளுக்கு விரும்பிச் செல்லும் மூத்த குடிமக்கள்

அக்கம்பக்க கடைத்தொகுதிகளுக்கு விரும்பிச் செல்லும் மூத்த குடிமக்கள்

2 mins read
9c3394e3-e306-465f-ac50-c5bca094f93f
திருமதி லிசா சலீம், கடைத்தொகுதிகளில் அதிக ஓய்வு இடங்களையும் பேரக்குழந்தைகளுடன் பிணைப்பை வலுப்படுத்தும் தலைமுறைகளுக்கு இடையிலான நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நகரின் மத்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளைவிட அக்கம்பக்கத்தில் உள்ள வணிக வளாகங்களுக்குச் செல்வதையே மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர்.

அவர்களில் பகுதிநேரப் பாதுகாப்பு அதிகாரியான லிசா சலீமும் ஒருவர்.

உட்லண்ட்ஸ் சர்க்கிளில் உள்ள தமது வீட்டிலிருந்து 15 நிமிடம் பேருந்தில் பயணம் செய்து வாரத்திற்கு ஒருமுறையாவது இவர் காஸ்வே பாயின்டுக்குச் செல்கிறார்.

பெரும்பாலும் தனது சகோதரி, கணவர் அல்லது பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து, உட்லண்ட்சில் உள்ள அந்த கடைத்தொகுதியில் பொருட்களை வாங்கவும் உணவருந்தவும் அவர் ஐந்து மணி நேரம் வரை செலவிடுவார்.

சில சமயங்களில் 57 வயதான அவர், சிறிது தொலைவில் ஈசூனில் உள்ள நார்த்பாயிண்ட் சிட்டிக்கு சிகை அலங்காரம் போன்ற காரணங்களுக்காகச் செல்கிறார்.

“அக்கம்பக்க வணிக வளாகங்கள் சிறந்தவையாக உள்ளன. பொருட்களின் விலை அவ்வளவு அதிகம் இல்லை. அதனால் அருகில் உள்ள கடைத் தொகுதிகளுக்கே செல்ல விரும்புகிறேன்,” என்றார் அவர்.

குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள காஸ்வே பாயிண்ட், நார்த்பாயிண்ட் சிட்டி போன்றவை முதியோர்களின் அன்றாடப் பழக்கங்களுக்கும், சமூகத் தொடர்புகளுக்கும் காரணமாக இருப்பதாக ஏப்ரலில் வெளியிடப்பட்ட புறநகர் வணிக வளாகங்களில் முதியவர்களின் சில்லறை வர்த்தகப் பழக்கங்கள் மற்றும் விருப்பங்கள் குறித்த ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

முதியோர்களில் 10ல் ஆறு பேருக்கு மேல் வாரத்திற்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கடைத் தொகுதிகளுக்குச் செல்கின்றனர். ஒரு சிலர், பலமுறை செல்வதாகவும் ஃபிரேசர்ஸ் புராப்பர்ட்டி மற்றும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் (எஸ்எம்யு) வெற்றிகரமாக மூப்படையும் நிலையம் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

அன்றாடப் பழக்கவழக்கம் மற்றும் சமூகத் தொடர்புகளே இந்த வருகைகளுக்குக் காரணமாகும். 77 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், வெளியே உணவருந்துவதற்காக கடைத்தொகுதிகளுக்குச் செல்கின்றனர். அதே நேரத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் கடைகளில் உள்ள பொருள்களை வேடிக்கைப் பார்ப்பதில் தங்கள் ஓய்வு நேரத்தைச்ச் செலவிடுகின்றனர்.

ஏறக்குறைய 67 விழுக்காட்டினர் தங்கள் துணைவர்களுடன் செல்கின்றனர். ஏறத்தாழ 57 விழுக்காட்டினர் வாரத்திற்கு $100 வரை செலவிடுகின்றனர்; கிட்டத்தட்ட 92 விழுக்காட்டினர் $200க்கு மேல் செலவிடுவதில்லை. இது, பொருள்களை வாங்குவதைவிட பழக்கம் மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட வருகைகளைப் பிரதிபலிக்கிறது.

குறிப்புச் சொற்கள்