சீனா செல்கிறார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

1 mins read
3c6239ef-5e66-4c12-95d5-0d6d86a1a73c
2022ஆம் ஆண்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பேங்காக்கில் சந்தித்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) முதல் நவம்பர் 29 வரை சீனாவில் இருப்பார்.

அங்கு அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்பட மூத்த சீனத் தலைவர்களைச் சந்திப்பார். அதோடு, ‘சுசோ’ தொழில்துறைப் பூங்காவின்’ 30ஆம் ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வார்.

அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றிருக்கும் திரு லீ, ‘சுசோ’, பெய்ஜிங், ஷாங்ஹாய் ஆகிய பகுதிகளுக்கும் செல்வார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

சிங்கப்பூரும் சீனாவும் இருநாட்டுக்கு இடையே மேலும் அணுக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திவரும் நிலையில், திரு லீயின் பயணம் இடம்பெறுகிறது.

அண்மையில், சிங்கப்பூரும் சீனாவும் வருடாந்தர இருதரப்புக் கூட்டத்தில் 25 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

குறிப்புச் சொற்கள்