தெம்பனிஸ் விபத்தில் மறைந்த தம்பதியின் குடும்பத்தைச் சந்தித்த மூத்த அமைச்சர்

தெம்பனிஸ் விபத்தில் மறைந்த தம்பதியின் குடும்பத்தைச் சந்தித்த மூத்த அமைச்சர்

படம்: அமைச்சர் க. சண்முகம் ஃபேஸ்புக்

18 Nov 2026 - 9:22 pm

1 mins read

தெம்பனிஸ் அவென்யு 12ல் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தை மூத்த அமைச்சர் க. சண்முகம் நேரில் சந்தித்ததாக அவரது ஃபேஸ்புக்கில் புதன்கிழமை (நவம்பர் 18) பதிவிட்டுள்ளார்.

அச்சாலை விபத்தில் ஒரு கார், சாலைத் தடுப்பைக் கடந்து மற்றுமொரு காரையும் ஒரு மோட்டார்சைக்கிளையும் மோதியது. அந்த மோட்டார் சைக்கிளில் அந்தத் தம்பதி பயணம் செய்தனர்.

படுகாயமுற்ற மோட்டார்சைக்கிளை ஓட்டிய ஆடவரும் பின்னிருக்கையில் இருந்த கர்ப்பிணியும் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு அங்கு மரணமடைந்தனர்.

சுவா சூ காங் இஸ்லாமிய இடுகாட்டில் அவர்கள் இருவரும் அக்டோபர் 30ஆம் தேதி இறுதி மரியாதையுடன் அருகருகே புதைக்கப்பட்டனர். மறைந்த இருவருக்கும் 24 வயது.

தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் எதிர்காலம் குறித்தும் நடைமுறைகள் சார்ந்த விவகாரங்கள் பற்றியும் சந்திப்பின்போது குடும்பத்தினரிடம் பேசியதாக அவரது பதிவில் விளக்கினார். குடும்பத்துடன் தொண்டூழியர்கள் தொடர்ந்து உதவுவர் என்று அவர் தெரிவித்தார்.

தம்பதிக்கு ஒரு ஆறு வயது மகன் இருப்பதாகவும் அவர் ஈசூனின் சொங்பாங் வட்டாரத்தில் வாழ்வதோடு அங்குள்ள பள்ளிக்குச் செல்வதாகவும் அமைச்சர் பதிவிட்டார்.

நீ சூன் தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களான சையது ஹருன் உட்பட மலாய் முஸ்லிம் சமூக அமைப்புகள் குடும்பத்தினரை சந்தித்து உதவிகள் வழங்கிவருவதையும் அக்குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சண்முகம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்