தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங் சியோங் பேரங்காடி $38.5 மில்லியன் லாபம் ஈட்டியது

1 mins read
523fe9e2-d480-419f-9c34-9cb88bd957c2
8 புதிய பேரங்காடிகளை செங் சியோங் திறந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேரங்காடி நிறுவனமான செங் சியோங் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 38.5 மில்லியன் வெள்ளி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 6.1 விழுக்காடு அதிகம்.

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அந்நிறுவனம் 36.3 மில்லியன் வெள்ளி நிகர லாபம் ஈட்டியது.

விற்பனை அதிகமாக இடம்பெற்றதால் இந்த லாபம் கிடைத்ததாக நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக ரமலான் பண்டிகைக் காலத்தில் விற்பனை கூடியதாக அது குறிப்பிட்டது.

மேலும் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் 8 புதிய பேரங்காடிகளை செங் சியோங் திறந்தது. இது விற்பனையை அதிகரிக்க காரணமாக இருந்தது.

முதல் காலாண்டில் மொத்த லாபம் 122 மில்லியன் வெள்ளியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 110.7 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது.

இவ்வாண்டு பேரங்காடிகளுக்கான செயல்பாட்டுச் செலவுகள் அதிகமாக இருந்தாலும் செங் சியோங் நல்ல லாபத்தை ஈட்டியது. செயல்பாடுச் செலவுகள் மட்டும் 81.6 மில்லியன் வெள்ளி.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பங்குச் சந்தையில் செங் சியோங் நிறுவனத்தின் ஒரு பங்கு 1.74 வெள்ளியாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்