சிங்கப்பூர்-சீன நிறுவனங்களிடையே 15 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்து

1 mins read
7d3e9b2b-5126-4e31-a818-c7cf8dccc4db
சிங்கப்பூர்-சீனா ஏழாவது வர்த்தக, முதலீட்டு கருத்தரங்கு. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர்-சீனா ஏழாவது வர்த்தக, முதலீட்டு கருத்தரங்கில் (SCTIF) S$60 மில்லியன் மதிப்பிலான 15 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

சீனாவின் ஷாங்காய் நகரில் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் (SBF) புதன்கிழமை (நவம்பர் 6) ஏற்று நடத்திய அந்தக் கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சீனா அனைத்துலக இறக்குமதி கண்காட்சியின் ஒரு பகுதியாக அந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது.

புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்ட நிகழ்வு புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் இருதரப்பு பங்காளித்துவத்துக்கும் வழி அமைத்து உள்ளதாக சம்மேளனம் தெரிவித்து உள்ளது.

எல்லை தாண்டிய வர்த்தகத் தீர்வுகள், கட்டுமானத் தொழில்நுட்பம், கல்விச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றம் தளவாடச் சேவைகளை உள்ளடக்கிய உடன்பாடுகள் அவை.

அந்த உடன்பாடுகளில், ஒன் சாம்பியன்ஷிப், எட்டெக் பிளஸ், அலிபாபா இன்டைம் பிஸ்னெஸ் குரூப், ஷாங்காய் பிஸ்னெஸ் ஸ்கூல், கிரிம்சன் லாஜிக் போன்ற பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு உள்ளன.

“இவ்வாண்டின் சிங்கப்பூர்-சீனா வர்த்தக, முதலீட்டு கருத்தரங்கில் அதிகமான புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டது குறித்து மனமகிழ்ச்சி அடைகிறோம்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் ஒத்ழைப்பையும் அதிகரிப்பதற்கான பயனுள்ள தளமாக இந்த நிகழ்வு தொடர்ந்து விளங்குகிறது,” என்று சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்