வர்த்தக உறவை வலுவாக்கும் சிங்கப்பூர், அர்ஜென்டினா

வர்த்தக உறவை வலுவாக்கும் சிங்கப்பூர், அர்ஜென்டினா

படம்: சிஎம்ஜி

01 Nov 2026 - 8:16 pm

1 mins read

சிங்கப்பூருக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) மெர்கோசூர் - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு நடப்புக்கு வந்துள்ளது.

அது தென் அமெரிக்காவுடனான சிங்கப்பூரின் பொருளியல் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சும் சிங்கப்பூரிலுள்ள அர்ஜென்டினா தூதரகமும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

“முக்கிய வேளாண், உணவு உற்பத்தியாளரான அர்ஜென்டினா, உணவு இறக்குமதி மூலங்களைப் பன்முகப்படுத்துவதற்கும் உணவு மீள்திறனை வலுப்படுத்துவதற்கும் சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. மேலும், எரிசக்தி, உள்கட்டமைப்பு, தளவாடம், தொழில்நுட்பம், சேவைகள் போன்ற துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன,“ என்றும் அவை குறிப்பிட்டன.

தென்கிழக்காசியாவில் உள்ள வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அர்ஜென்டினா வர்த்தகங்கள் சிங்கப்பூரின் வட்டார நடுவ நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இரு தரப்பும் தெரிவித்தன.

‘தெற்குப் பொதுச் சந்தை’ என்றழைக்கப்படும் மெர்கோசூர், 1991ஆம் ஆண்டில் அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. அது கிட்டத்தட்ட 270 மில்லியன் பேரைப் பிரதிநிதிக்கிறது.

மெர்கோசூர் - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு ஏற்கெனவே சிங்கப்பூருக்கும் மற்ற மூன்று மெர்கோசூர் உறுப்பு நாடுகளுக்கும் இடையே நடப்பில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்