தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வான்வழி விநியோகத்தில் பாதுகாப்பைக் கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படை

4 mins read
6974876b-bb22-4c86-83e9-543978a9c4bb
சி-130 ஹெர்குலிஸ் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட சுமையை கண்காணித்துக்கொண்டிருக்கும் லோட்மாஸ்டர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்குவது போன்ற வெளிநாட்டுப் பணிகளுக்காகச் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் சி-130 ஹெர்குலிஸ் விமானம் பயன்படுத்தப்படும்போது, துல்லியமும் பாதுகாப்பும் அத்தியாவசியமாகிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் வான்-நில ஒருங்கிணைப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கும் சி-130 விமானம், படைகளுக்குத் தேவைப்படும் வெடிபொருள்கள், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்களை வானிலிருந்து உத்திபூர்வமாக விநியோகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பணிகளுக்குத் தேவைப்படும் உயர்மட்டத் திறனே, மனிதநேய உதவிப்பொருள்களை அனுப்பும் நடவடிக்கைகளையும் நம்பிக்கையுடன் மேற்கொள்ள ஆகாயப்படைக்கு உதவுகிறது.

சி-130 ஹெர்குலஸ் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட சுமை.
சி-130 ஹெர்குலஸ் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட சுமை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியின்போது இத்திறன்கள் மேலும் வலுவடைகின்றன. சிங்கப்பூரில் இடவசதி, பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளால் இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது.

பயிற்சியின்போது, ஆகாயப்படையின் 122வது பிரிவும் ராணுவத்தின் 3வது ஆயுதப்படையின் போக்குவரத்துப் பட்டாளமும் தத்ரூபமான வான்வழி விநியோகப் பயிற்சிகளை நடத்துகின்றன.

இவை, லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம. மகேன்திரன், 23, போன்ற சி-130 விமா குழுவினர்களின் பணி வெற்றியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான திறன்களை மேம்படுத்த உதவுகின்றன.

சரக்கு அறையில் சி-130 விமானத்தின் கைகளும் கண்களுமாகச் செயல்படும் இவர், தீவிரமான உத்திபூர்வமாகப் பறக்கும்போது கிட்டத்தட்ட 2,000 பவுண்ட் வரை எடையுள்ள சுமையைப் பாதுகாப்பதைப் பொறுப்பாகக் கொண்டுள்ளார்.

சி-130 விமான குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23.
சி-130 விமான குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு காஸாவிற்கு வான்வழி மனிதநேய உதவிப் பொருள்களை அனுப்பிய குழுவின் ஓர் உறுப்பினராக இவர் பெற்ற அனுபவம், உண்மையான செயல்பாடுகளின் அசாதாரண அழுத்தத்தை எடுத்துக்காட்டியதாகக் கூறினார்.

அழுத்தமான சூழ்நிலையிலும் பாதுகாப்பு என்பது கட்டாயத் தேவை என்பதை வலியுறுத்தினார் திரு மகேன்திரன்.

“இச்சூழ்நிலைகளில் ஆபத்துகள் அதிகம். முதல் முயற்சியில் பொருள்களை இறக்கவேண்டும் என்பதால் அவற்றைப் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சி-130 விமான குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23.
சி-130 விமான குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சி தமது நிபுணத்துவத்தை ஆழப்படுத்தவும் தமக்கு அடுத்துவரும் தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கவும் உதவுகிறது என்றார் திரு மகேன்திரன்.

இங்கு மேற்கொள்ளப்படும் தாழ்வாகப் பறத்தல்களும் ஜி-விசை அசைவுகளுடன் கூடிய கடினமான உத்திபூர்வ பறத்தல்களும் கணிக்க முடியாத செயல்பாட்டுச் சூழல்களுக்குத் தேவையான உடல், மனவுறுதியை வளர்க்க விமானக் குழுவினருக்கு உதவுகின்றன.

குறைபாடற்ற கூட்டுப் பாதுகாப்பு நெறிமுறை

போர்ப் பணி, மனிதாபிமான பணி எதுவாக இருந்தாலும், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையும் ராணுவமும் இணைந்து பணிகளில் ஈடுபடும்போது, குறைபாடற்ற பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

வான்வழி விநியோகம் செய்வதற்குமுன், 3வது ஆயுதப்படையின் போக்குவரத்துப் பட்டாளத்தைச் சேர்ந்த ராணுவத்தின் கயிறு கட்டும் நிபுணர்களும் கொள்கலன் விநியோக முறையைக் கவனத்துடன் தயார்செய்கின்றனர். துல்லியமான செயல்பாட்டை உறுதிப்படுத்த பல சோதனைகளின்வழி சுமைகளையும் வான்குடைகளையும் கட்டமைத்து, பாதுகாப்பாக ஒன்றாகக் கட்டுகின்றனர். முழுமையாகக் கட்டப்பட்ட சுமை விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும்போது, அது விமானப் பயணத்திற்குத் தயாராகிவிடுகிறது.

இதனைத் தொடர்ந்து கூட்டு வான்வழி விநியோகச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், லோட்மாஸ்டர்களும் கயிறு கட்டும் நிபுணர்களும் அனைத்தையும் தீவிரமாகச் சோதித்து, சுமைகள் சரியாகக் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளனவா என உறுதிசெய்கிறார்கள். இது ஆபத்தான கட்டுப்பாடற்ற விநியோகத்தைத் தடுத்து, கொள்கலன் விநியோக முறை சரியாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்து, விமானம் பறந்துகொண்டிருக்கும்போது பாதுகாப்பை உறுதிசெய்வது. இதில் லோட்மாஸ்டர்கள் பறப்பதற்கு முந்தைய விரிவான சோதனைகளையும், தொடர்ந்து பறக்குபோது கண்காணிப்பையும் மேற்கொள்கின்றனர். சரக்கில் பொருத்தப்பட்டுள்ள பூட்டுகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதையும் குறிப்பாக, காற்றுக் கொந்தளிப்பின்போது வீரர்கள் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளார்களா என்பதையும் அவர்கள் உறுதிசெய்கின்றனர். ஏனெனில், எந்தவொரு சுமை நகர்வும் ஆபத்தை விளைவிக்கலாம்.

“சுமை பாதுகாப்பாக வெளியேறி, தரையில் உள்ள மக்கள் அதை மீட்டெடுக்கக் கூடிய இடத்தில் தரையிறங்குவதைக் காண்பதே இந்தப் பணியின் மிகச் சிறந்த அம்சமாகும்,” என்றார் திரு மகேன்திரன்.

சி-130 விமானக் குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23.
சி-130 விமானக் குழுவினர், லோட்மாஸ்டர் முதலாம் சார்ஜண்ட் ம.மகேன்திரன், 23. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூட்டுச் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல்

ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளம் வழங்கும் பரந்த இடவசதி, முழு குழுவினரும் பாதுகாப்பாகச் செயல்படவும், அவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தவும் இன்றியமையாததாக அமைகிறது.

“பாதுகாப்பு என்பது பணி திட்டமிடல் மற்றும் களச் செயல்பாட்டிலிருந்தே தொடங்குகிறது,” என்று சி-130 நேவிகேட்டர், மேஜர் சாங் ஓங் கீட் கூறினார்.

ராணுவப் பணியாளர்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்களுடன் இணைந்து பயிற்சி செய்வதன்மூலம், சி-130 விமான குழுவினர் அனைவரும் சரியான முறையில் மோதல்களைத் தவிர்க்கத் திட்டமிட கற்றுகொள்கின்றனர். இதன்மூலம் பணிகளின் பாதுகாப்பான, வெற்றிகரமான நிறைவேற்றத்தை உறிதிசெய்ய முடிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

சி-130 ஹெர்குலஸ் விமானம்.
சி-130 ஹெர்குலஸ் விமானம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவர்கள் தத்ரூபமான வான் சூழ்நிலைகளையும் ஒத்திகை பார்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, உண்மையான செயல்பாடுகளின்போது சி-130 விமான குழுவினர் எதிர்கொண்ட ‘ஜிபிஎஸ்’ எனப்படும் புவியிடங்காட்டி நெரிசல் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2003ல் தமது முதல் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியில் ஈடுப்பட்ட திரு சாங், அப்போது வெவ்வேறு படைகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயல்பட்டன என்று குறிப்பிட்டார். ஆனால், காலப்போக்கில் சிங்கப்பூர் ஆயுதப் படை பரிமாணமடைந்து, இப்போது முழுமையான ஒருங்கிணைந்த செயல்பாடாக (fully integrated operation) இயங்குகின்றது என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்