சிங்கப்பூரில் கார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 57 வர்த்தகச் சின்னங்களில் 10 மாதத்திற்குச் சராசரியாக ஒரு காரைக் கூட விற்கவில்லை. அதேவேளையில், நான்கு முன்னணி வர்த்தகச் சின்னங்கள் புதிய கார்களில் பாதிக்கும் மேலான பங்கைக் கைப்பற்றியுள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் வரை பதிவு செய்யப்பட்ட மொத்தம் 40,986 புதிய கார்களில் 52.8 விழுக்காடு, அதாவது 21,643 கார்கள் பிஒய்டி, டொயோட்டா, டெஸ்லா, மெர்செடிஸ்-பென்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களைச் சேர்ந்தவை. மீதமுள்ள 47.2 விழுக்காடு பங்கு ஏனைய 53 வர்த்தகச் சின்னங்களுக்கிடையே பிரிந்துள்ளது.
ஆஸ்டன் மார்ட்டின், லம்போர்கினி போன்ற சொகுசு கார்களுடன் பெர்சோ, ஃபோர்ட், கேஜிஎம் ஆகியவை தலா 3 கார்கள், சீனாவின் ஸ்கைவர்த் 6 கார்கள் பதிவுசெய்யப்பட்டு கடைசி 10 நிலையில் உள்ளன.
ரெனோ, மிட்சுபிஷி ஆகியவை 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் புதிய கார்கள் எதையும் பதிவு செய்யவில்லை. 2024ல் காலடி வைத்த சீனாவின் ‘செரெஸ்’ நிறுவனம் 2025ல் 8 கார்களைப் பதிவு செய்த நிலையில், 2026ல் இதுவரை ஒரு காரைக் கூடப் பதிவு செய்யவில்லை.
சீன நிறுவனங்களின் வருகையால் 2024ல் 49 ஆக இருந்த கார் நிறுவனங்களின் எண்ணிக்கை 2025ல் 57 ஆக உயர்ந்தது.
எனினும், 2025 இறுதி நிலவரப்படி பிரான்சின் ரெனோ, பெர்சோ கார்கள் தலா 3,000க்கும் அதிகமாகவும் மிட்சுபிஷி கார்கள் 16,000க்கும் அதிகமாகவும் சிங்கப்பூர்ச் சாலைகளில் இயங்கி வருகின்றன.
தற்போதுள்ள சில நிறுவனங்களில் கார் பதிவு எண்ணிக்கைகள் குறைவாக இருந்தபோதிலும், வரும் மாதங்களில் மேலும் ஆறு புதிய நிறுவனங்கள் சிங்கப்பூர் சந்தையில் கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாகன உரிமை சான்றிதழ் கட்டணக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதன் காரணமாகக் கார் விலை உச்சத்தில் உள்ளது.
