பிரதமர் லாரன்ஸ் வோங் சீனப் பிரதமர் லீ சியாங்குடன் அக்டோபர் 11ஆம் தேதி இருதரப்புச் சந்திப்பை நடத்தியுள்ளர்.
ஆசியான் கூட்டங்களுக்கு இடையில் அவர்கள் சந்தித்துப் பேசினர்.
மேம்படுத்தப்பட்ட ‘அனைத்தையும் உள்ளடக்கிய, உயர்தர, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பங்காளித்துவம்’ மூலம் ஒத்துழைப்புகளை மேலும் வளர்ப்பது குறித்துத் தாங்கள் கலந்துரையாடியதாகப் பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகால, ஆழமான நட்புறவு நிலவுகிறது.
சூச்சோ தொழிற்பூங்கா இந்த ஆண்டு 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அடுத்த ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்.
தாம் இணைத் தலைவராகப் பொறுப்பு வகித்த ‘சிங்கப்பூர்-சீனா இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பே இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட தளம் என்று பிரதமர் கூறினார்.
இரு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் நோக்கில் சீனாவுடன் மேலும் வலுவான உறவுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.