ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனங்களான கெப்பல், ஜென்ஜீரோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிலிப்பீன்சில் உள்ள நிலக்கரி ஆலையை மூடத் திட்டமிட்டுள்ளன.
அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளையும் என்று கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் சிங்கப்பூர் நாணய ஆணையம் கரிம ஊக்கப் புள்ளிகளை வழங்குகிறது. அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பிலிப்பீன்சில் உள்ள நிலக்கரி ஆலையை மூடத் திட்டமிடப்படுகிறது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டால் பத்துக்கும் மேற்பட்ட நிலக்கரி ஆலைகள் மூடப்படும்.
ஆசிய நாடுகளில் அதிகமாக நிலக்கரி ஆலைகள் உள்ளன. அவற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. புதிய திட்டத்தால் ஆசியாவில் காற்று மாசு குறையலாம்.
பிலிப்பீன்சின் பட்டன்காஸிசில் உள்ள நிலக்கரி ஆலை 2030ஆம் ஆண்டுக்குள் மூடப்படும். இதற்கு முன்னர் 2040ஆம் ஆண்டுக்குள் மூடத் திட்டமிடப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலக்கரி ஆலை மூடப்பட்டால் 19 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியாகாமல் தடுக்க முடியும்.