தமிழ்நாடு: சென்னையில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம் இவ்வாண்டு (2025) ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து புதிய வளாகத்தில் செயல்படும். சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அண்ணாசாலையில் பிரெஸ்டிஜ் பாலிகன் (Prestige Polygon) கட்டடத்தின் 9ஆம் மாடியில் புதிய துணைத் தூதரகம் அமைந்திருக்கும். அலுவலகம் வழக்கம்போல் இந்திய நேரப்படி காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை இயங்கும். தற்போதுள்ள வளாகத்திலிருந்து துணைத் தூதரக அதிகாரிகள் ஜூலை 30, 31ஆம் தேதிகளில் புதிய முகவரிக்கு மாறுவார்கள். அந்த இரண்டு நாள்களும் துணைத் தூதரகம் செயல்படாது.
உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் அலுவலக அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்: +91-984-003-3136.
துணைத் தூதரகத்தின் புதிய முகவரி:
9ஆம் மாடி, பிரெஸ்டிஜ் பாலிகன் அண்ணா சாலை சென்னை 600 035
தொலைபேசி எண்: +91 44243 20050 மின்னஞ்சல்: singcon_maa@mfa.sg இணையத்தளம்: www.mfa.gov.sg/chennai

